பக்கம்:தேன்பாகு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாசில்தாருக்கு அதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது. "உனக்கா?" என்று கேட்டார்.

"ஆமாம் எனக்குத்தான். நீங்கள் மனசு வைத்தால் எனக்கு ஏதாவது உத்தியோகம் பண்ணி வைக்கலாமே!" என்றான்.

தாசில்தார் சிறிது யோசித்தார். பிறகு, "நான் ஒரு மணியக்காரருக்குக் கடிதம் தருகிறேன்,அதை அவரிடம் காட்டி அவர் சொல்கிற வேலையைச் செய்" என்றார். அப்படியே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அவன் ஆவலோடு அதை வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட மணியக்காரரிடம் காட்டினான். அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து, "இதைத் தின்னு" என்றார்,

குப்பன் உத்தியோகம் பார்ப்பதற்கு முன் இப்படித்தான் செய்யவேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி, அதை மிகவும் சிரமப்பட்டு பென்று விழுங்கினான். அதற்குள் அவனுக்கு விழி பிதுங்கிப் போய்விட்டது. இருந்தாலும் உத்தியோகம் பெறலாம் என்ற ஆசையில் எப்படியோ அந்தத் துண்டுகளில் ஒன்றுவிடாமல் மென்று விழுங்கி விட்டான்.

அதைக்கண்ட மணியக்காரருக்குச் சிரிப்பு சிரிப்பாக வந்தது. 'இவன் படு முட்டாள்' என்று உணர்ந்து கொண்டார். "சரி, இன்னும் ஒரு மாதம் கழித்து வா" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/16&oldid=1261008" இருந்து மீள்விக்கப்பட்டது