பக்கம்:தேன்பாகு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17



மரக் கொம்புகளைக் கொண்டு வந்து கொடுத்தன. அவற்றைச் சமித்து என்று சொல்வார்கள். குரங்குகள் மரங்களிலுள்ள மலர்களையும் பழங்களையும் கொண்டு வந்து கொடுத்தன. காட்டில் இருந்த பசுமாடுகள் அவருக்கு நிறையப்பாலை வழங்கின. அந்தப் பாலைத் தயிராக்கி வெண்ணெய் எடுத்து நெய்யாக்கி யாகத்துக்குப் பயன் படுத்தினார். அவருடன் சில சீடர்கள் இருந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து வந்தார்கள்.

அந்த முனிவர் உலக நன்மைக்காக வேள்வி புரிவதை அறிந்த பலர் அங்கே வந்து அவரை வணங்கிவிட்டுப் போவார்கள். தங்களால் ஆன அரிசி முதலியவற்றைக் கொடுப்பார்கள். அங்கங்கே உள்ள அரசர்களும் வங்து அவருடைய யாகத்தைத் தரிசித்து அரிசி, பருப்பு முதலிய வற்றை நிறைய அளிப்பார்கள். ஒரு மாசம் முடிந்தவுடன் முனிவர் வந்திருந்தவர் எல்லோருக்கும் சாப்பாடு போடுவார். ஏழைகள் பலர் வந்து வயிறாரச் சாப்பிட்டுப் போவார்கள். -

ஒரு நாள் ஓர் அரசன் அங்கே வந்தான் அவன் பொல்லாத குணமுடையவன். தன் நாட்டுக் குடிமக்களுக்கு அதிகமாக வரி போட்டுத் துன் புறுத்துகிறவன். அவன் முனிவருடைய ஆசிரமத்துக்கு வந்து அங்கே நடைபெறும் யாகத்தையும் பலரும் வந்து அவருக்கு உதவி புரிவதையும்

தே-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/19&oldid=1338644" இலிருந்து மீள்விக்கப்பட்டது