பக்கம்:தேன்பாகு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28

பாவங்களும் போய்விடும் என்றார். இதோ நான் ஒரு முழுக்குப் போடுகிறேன்." என்று சொல்லி மூழ்கி எழுந்தான். இப்போது என் பாவமெல் லாம் போய்விட்டன. இதோ அவரை மீட்கிறேன். என்று கங்கையில் குதிக்கப் போனான்.

அப்போது பார்வதியும் பரமசிவனும் தம் சுய உருவத்தில் தோன்றி அவனுக்கு அருள் பாலித் தார்கள், பிறகு கைலாசம் போய்ச் சேர்ந்தார்கள்.

அங்கே பார்வதியிடம் பார்த்தாயா? புரா .ணம் கேட்ட எத்தனை பேருக்கு நம்பிக்கை இருந்தது. அந்தப் புராணத்தைச் சொன்ன வர்க்கே இல்லையே ஒருவன்தானே முழு நம்பிக் கையோடு வந்தான்' என்று பரமேசுவரன் திருவாய் மொழிந்தருளினான். பார்வதி சிரித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/30&oldid=581227" இருந்து மீள்விக்கப்பட்டது