பக்கம்:தேன்பாகு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35

காக்காயே, காக்காயே, நீ நன்றாகப் பாடு வாய் என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன் பாட்டைக் கேட்டு மகிழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், ஒரு பாட்டுப்பாடு” என்று கரி சொல்லியது. காக்கை பாட்டுப்பாட வாயைத் திறக்கும்போது வடை கீழே விழுந்துவிடும் என் றும் அதை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என் றும் எண்ணியது.

காக்க்ை கொஞ்சம் தந்திரசாலி. தன் வாயில் வைத்திருந்த வடையைக் காலின் கீழ் வைத்து அமிழ்த்திக்கொண்டு, “கா,கா' என்று கரைந்தது. தான் செய்த தந்திரம் பலிக்கவில்லையே என்று எண்ணிய நரி மற்றொரு தந்திரம் செய்ய எண்ணி . ة تقني li

'காக்காயே, நீ எவ்வளவு அழகாகப் பாடு கிறாய்! நானும் எவ்வளவோ பாட்டைக் கேட் டிருக்கிறேன். இப்படி இனிமையாகப் பாடுவதைக் கேட்டதே இல்லை' என்று கரி காக்கையைப் புகழ்ந்தது, அதைக் கேட்ட காக்கைக்கு உச்சி குளிர்ந்து விட்டது. .

  • நீ நன்றாகப் பாடுகிறாயே! உனக்கு நடனம் செய்யக்கூடத் தெரியும் என்று சொல்கிறார்கள், உன் பாட்டைக்கேட்டு மகிழ்ச்சி பெற்ற எனக்கு உன் ஆனந்த நடனத்தைக்கண்டு களிக்கவும் ஆசையாக இருக்கிறது. கொஞ்சம் நடனம் ஆடிக் காட்டு பார்ப்போம்' என்றது.

அந்தப் புகழ்ச்சியினால் மயங்கிய காக்கை உடனே காலைத் துக்கித்துக்கி நடனம் செய்யத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/37&oldid=581234" இருந்து மீள்விக்கப்பட்டது