பக்கம்:தேன்பாகு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


எண்ணியது, ஒவ்வொன்றும், "நமக்கு அந்த மாதிரி வால் இருந்தால்?" என்று ஏங்கியது.

இரண்டும் ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டு "இந்தக் காளியை நோக்கித் தவம் புரிவோம். கம் வால்களை மாற்றிக் கொள்வோம்" என்று சொல்லித் தவம் புரிந்தன. காளியின் அருளால் ஆட்டுக்கு மாட்டின் வாலும், மாட்டுக்கு ஆட்டின் வாலும் வந்துவிட்டன. இரண்டு பிராணிகளுக்கும் ஒரே ஆனந்தம்.

ஒரு வாரம் ஆயிற்று முன்பெல்லாம் மாடு தன் முதுகில் ஈ வந்து உட்கார்ந்தால் தன் நீண்ட வாலினாலேயே அவற்றை ஒட்டும். இப்போது அப்படி ஈ உட்கார்ந்தால் தன் குட்டையான வாலை ஆட்ட முடிந்ததே அன்றி ஈயை ஒட்ட முடியவில்லை: என்னடா இது? சங்கடமாக இருக்கிறதே!' என்று எண்ணியது.

ஆடு முன்பெல்லாம் முள் வேலிப் பக்கத்தில் போய் மேயும். அந்த வேலியைத் தாண்டிப்பாயும் பழைய நினைவோடு இப்போதும் வேலியைத் தாண்டியது. இப்போது வால் வேலியில் அகப் பட்டுக் கொண்டது அதை மெல்ல எடுப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது. "ஏண்டா இந்தவாலை வாங்கிக் கொண்டோம்?" என்று முணுமுணுத்தது.

கடைசியில் ஒரு நாள் காளி கோயில் முன் அவைஇரண்டும் மீண்டும் சந்தித்தன. "தம்பி, எப்படி இருக்கிறாய்?" என்று மாடு ஆட்டை விசாரித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/40&oldid=1335227" இலிருந்து மீள்விக்கப்பட்டது