பக்கம்:தேன்பாகு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


41

ஐயர் பசிக்கிறது; கொஞ்சம் சோறு போடுங் கள்" என்றான். அந்தச் செல்வர், "உன்னைப் பார்த்தால் கொட்டாப்புளி மாதிரி இருக்கிறாய். எங்கேயாவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா? உனக்கு வெட்கமாக இல்லை; இங்கே சோறும் இல்லை; ஒன்றும் இல்லை போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார். .

அரசன் மற்றொரு செல்வர் வீட்டுக்குப் போய்ச் சோறு கேட்டான். அவரோ, இது சத்திரமா, கண்டவர்களுக்கெல்லாம் சோறு போட போடா வெளியே' என்று துரத்தி விட்டார். -

அரசன் மூன்றாவது வீடு ஒன்றுக்குப் போனான். அவன் பிச்ச்ை கேட்க வருகிறான் என்று எண்ணி அவனைக் கண்டவுடன் வாயிற் கதவைச் சாத்தி விட்டார்கள்.

அரசனுக்கு இவர்களுடைய நடத்தையைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது, வாய் கிழியப் பேசினவர்கள் இப்படி இருக்கிறார்களே!' என்று வருந்தினான். -

பிறகு வேறு எங்காவது போகலாம் என்று கடந்து போய்க் கொண்டிருக்கையில் ஒரு கூலி யாள் தான் கொண்டு வந்திருந்த கட்டுச்சோற்று: மூட்டையை அவிழ்த்துக் கொண்டிருந்தான். அங்கே சென்ற அரசன், ஐயா, மிகவும் பசியாக இருக்கிறது, கொஞ்சம் சோறு போடுங்கள்' என்றான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/43&oldid=581240" இருந்து மீள்விக்கப்பட்டது