பக்கம்:தேன்பாகு.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45


யாரும் இல்லை. அங்கே ஒரு கிண்டி இருந்தது. அதை எடுத்துத் தம் பையில் போட்டுக்கொண்டு புறப்பட்டு விட்டார்.

பிறகு வீட்டுக்காரர்கள் கூடத்தில் இருந்த கிண்டியைக் காணாமல் எங்கும் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் ஆயின. அந்த இரண் நாளும் அந்தப் பிராமணர் அந்த வீட்டுக்குப் போகவில்லை. மூன்றாவது நாள் போனார். அங்கே நின்றபோது அவருடைய மனதில் கிண்டியைத் திருடின நினைவு தோன்றியது. மார்பு 'படக் படக்' கென்று அடித்துக்கொண்டது. "கிருஷ்ணாய நமஹ" என்று சொல்லவேண்டியவர் "கிண்டியாய நமஹ" என்று சொல்லிவிட்டார். அவர் மனதில் இருக்தது அவரை அறியாமலே வாயில் வெளிப்பட்டுவிட்டது.

அதைக்கேட்ட வீட்டுக்காரர்கள் 'இவர் என்ன கிண்டியாயகமஹ, என்றாரே, இவரேகிண்டியைத் திருடியிருப்பாரோ?' என்று எண்ணி, "ஒய்! பிராம்மனா, கிண்டி எங்கே? என்று அதட்டிக் கேட்டார்கள், முன்பின் இத்தகைய காரியத்தைச் செய்து அறியாதவராதலின் அவர் தடுமாறினார். கடைசியில் கிண்டியைத் தாமே எடுத்துச் சென்ற தாகவும் மறுநாள் கொண்டு வந்து கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.

மறுகாள் கிண்டி வந்து சேர்ந்தது. 'கிருஷ்ணாய நமஹ, 'கிண்டியாய நமஹ, ஆனதை எண்ணி வீட்டுக்காரர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/47&oldid=1338666" இருந்து மீள்விக்கப்பட்டது