இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அசட்டு அனந்தன் தன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தான். அங்கே அவனுக்கு அன்று பண்ணியிருந்த கொழுக்கட்டையைத் தந்தார்கள். அதைச் சுவைத்து உண்டான். தன் மனைவியைக் கொழுக்கட்டை பண்ணச் சொல்லிச் சாப்பிட வேண்டும் என்று தீர்மானித்தான், அங்கிருந்து புறப்பட்டவன்கொழுக்கட்டையையோகினைத்துச் சொல்லிக் கொண்டு போனான்.