பக்கம்:தேன்பாகு.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48


தும் அவனுக்குத் தான் உண்டது கொழுக்கட்டை என்று நினைவு வந்தது. உடனே, "ஆமாண்டி, அந்தக் கொழுக்கட்டையைத்தான் சொல்ல வங்தேன். அது மறந்து போய், யாரோ ஒருவன் வழியில் சொன்ன அ த் தி ரி ம க் கு என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டேன். தெரியாமல் அடித்துவிட்டேன்" என்று அவளைத் தடவிக்கொடுத்தான். அன்று அவனுக்குக் கொழுக்கட்டை கிடைத்தது. ஆனால் அவள் உடலில் ஏற்பட்ட கொழுக்கட்டை போன்ற வீக்கம் ஆற சில நாள் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/50&oldid=1340028" இருந்து மீள்விக்கப்பட்டது