பக்கம்:தேன்பாகு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50

வாய்விட்டுச் சொல்வதற்கில்லை" என்று அவள் சொல்லவே, குருக்கள் மேலும் அவளைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று சும்மா இருந்து விட்டார்.

'என்னடி இது? ஒவ்வொரு நாளும் மணிக் கனக்காகத் தீர்த்தத்தைக் கொண்டுபோய்க் கோயிலுக்குக் கொடுக்கிறாயே! எதற்காக? உன் மனசிலே என்ன. இருக்கிறது?" என்று அவளுடைய அம்மாளே கேட்டாள்.

'அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், இப் போது எனக்குப் பசிக்கிறது. சாதம் போடு' என்று சொல்லித் தாய் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் மழுப்பினாள்.

'யாராவது ராஜகுமாரன் வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையோ! பேசாமல் உன் மாமன் மகனைக் கட்டிக்கொண்டு சந்தோஷமாய் இரு' என்றாள் தாய். அவளுடைய அண்ணன் மகன் சுப்பனைத் தான் அவள் குறிப்பிட்டாள்.

  • அந்தச் சுப்பனையா' என்று ஆத்திரத் துடன் கேட்டாள் கனகவல்லி,

ஏன், அவனைவிட்டால் உனக்கு ஆகாயத் திலிருந்து மாப்பிள்ளை குதிக்கப் போகிறானோ?” என்றாள் தாய். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/52&oldid=581248" இருந்து மீள்விக்கப்பட்டது