பக்கம்:தேன்பாகு.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52பாக இருந்தது. இவனையா கட்டிக் கொள்வது? கடவுளே! என்று பெருமூச்செறிவாள்.

வேறு ஒரு நாள் அந்த ராஜகுமாரன் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு கோவிலுக்கு வந்தான். அங்கே இருந்த கனகவல்லியைப் பார்த்து மெல்லிய குரலில், ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா? " என்று கேட்டான்.

அவள் அசப்பில், "ஹாம்!' என்றாள், அவள் அதை நினைத்துச் சொல்லவில்லை. ஆனாலும் அவள் வாயிலிருந்து அப்படி வந்துவிட்டது.

'உன் அப்பாவிடம் பேசி உன்னை என் குதிரை மேல் ஏற்றி என் ஊருக்கு அழைத்துப் போவேன்.என் அப்பா,அம்மா உன்னைப் பார்க்க வேண்டாமா?"

இப்போது அவள் அவன் வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொண்டு, ஆகட்டும்' என்று சொன்னாள். ராஜகுமாரனுக்கு ஒரே சந்தோஷம்.

அவன் தான் சொன்னபடியே கனகவல்லியின் தாய் தங்தையரைப் பார்த்துத் தன் கருத்தைச் சொன்னான். தான் அரசகுமாரன் என் பதையும் தெரிவித்தான். .

நாங்கள் ஏழைகள். ஓர் அரசகுமாரருக்குப் பெண்ணைக் கொடுக்கும் அந்தஸ்து எங்களுக்கு இல்லையே!" என்று அவர்கள் சொன்னார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/54&oldid=970805" இருந்து மீள்விக்கப்பட்டது