பக்கம்:தேன்பாகு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


யில் அவனைச் சேர்த்து, வேண்டிய பணிவிடைகளைச் செய்தாள். அவனுக்குச் சரியான நினை வில்லாமல் நனவும் கனவும் போன்ற ஒரு மயக்க நிலையில் இருந்தான்.

சில நாட்களில் அவனுக்கு மயக்கம் தெளிந்தது. கண்ணை விழித்துப் பார்த்தான். கனகவல்லி நின்றிருந்தாள். "கனகவல்லி! நீயா!" என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.

"ஆமாம். உங்களை இந்த நிலையில் விட்டு விட்டுப்போக என் மனசு வரவில்லை. இங்கே தங்கி விட்டேன்."

"அப்படியா? இந்த ஏழையின் மேல் உனக்கு அவ்வளவு கருணையா? அரசகுமாரனோடு போகாமல் எனக்காக நின்று விட்டாயா? நீ என் தாய்; என் தெய்வம்! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று முட்டாள் தனமாக எண்ணினேனே! உன்னைத் தடுக்க வங்தேனே! அதற்கு ஆண்டவன் எனக்குத் தண்டனை அளித்து விட்டான்! சிறிதே ஆசு வாசப்படுத்திக் கொண்டான். பிறகு, "அது சரி அந்த ராஜகுமாரனை ஏன் விட்டுவிட்டாய்?அவன்; உன்னை ஆசையோடு அழைத்துக் கொண்டு போனானே;கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதா?" என்று கேட்டான். .

கனகவல்லி புன்முறுவல் பூத்தபடியே, "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அவர் மறுபடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/57&oldid=1340094" இலிருந்து மீள்விக்கப்பட்டது