பக்கம்:தேன்பாகு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மட்டியப்பன் அவசர அவசரமாகத் தன் வீட்டுப் புறக்கடைப்பக்கம் போனான். வேகமாக இருபது முப்பது கத்தரிச் செடிகளைப் பிடுங்கி வேரை வெட்டிக் கையில் எடுத்துக் கொண்டு வைத்தியர் வீட்டுக்கு ஓடினான். வைத்தியருக்கு முன் அந்த வேரைப் போட்டபோது அவர், "இது எந்த மூலைக்கப்பா போதும்? இதைப் போல இன்னும் பத்துப் பங்கு வேணுமே. இந்த வியாதிக்கு வழுதுணை வெப்பு என்று பேர். சரியானபடி கஷாயம் செய்து கொடுக்கா விட்டால் கேட்காதே. பாவம்! உனக்கு ஒரு மகள். அவளுக்கு இப்படியா வர வேண்டும்!" என்றார்.

"எங்கள் வீட்டுக் கொல்லையிலுள்ள செடியெல்லாம் பிடுங்கிக் கொண்டு வந்து விடுகிறேன். எப்படியாவது என் மகள் பிழைத்தால் போதும். நீங்கள்தான் தெய்வமாக இருந்து காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லி மட்டியப்பன் தன் வீட்டிற்கு ஓடினான்.

தன் வீட்டில் உள்ளவர்களையும் கூப்பிட்டு எல்லாக் கத்தரிச் செடிகளையும் பிடுங்கினான். வேரை நறுக்கிக் கட்டி வைத்தியரிடம் கொண்டு போய்ப் போட்டான்.

"நல்ல வேளை! அகப்படக் கூடிய சரக்காக இருக்கிறதே. அது உன் அதிர்ஷ்டம்தான், மலைச் சரக்கு ஏதாவது வேண்டுமென்றால் நாம் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/64&oldid=1396504" இலிருந்து மீள்விக்கப்பட்டது