பக்கம்:தேன்பாகு.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


63

செய்வது? சரி இனிமேல் நீ பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் உன் மகள் செளக்கியம் அடைவாள்' என்றார்.

வைத்தியர் ஒரு கஷாயத்தை ஒவ்வொரு வேளையும் நோயாளிக்குக் கொடுத்து வந்தார். ஆனால், அந்தக் கஷாயத்திற்கும் கத்தரி வேருக் கும் சம்பந்தமே இல்லை. வழு துணை வெப்பு' என்பதற்குக் கத்தரிக்காய்ஜுரம் என்று அர்த்தம். வைத்தியர் தாமாகச் சிருஷ்டித்த அந்தப் பெயரை மறை பொருளாகச் சொன்னார். மட்டியப்பன் அதைத் தெரிந்து கொள்ளவில்லை. X

அவன் மகள் செளக்கியம் அடைந்தாள். அவன மனைவி அவனைப் பார்த்து “அன்றைக்கு வைத்தியர் காலு கத்தரிக்காய் கேட்டாா; கொடுக்க மாட்டேன் என்று சொன்னோமே, இப் போது வேரோடு கத்தரிச்செடி எல்லாவற்றையும் கர்மே பிடுங்கினோமே!” என்றாள்,

"அப்போது புத்தி இல்லை' என்று வருத்தப்

பட்டான் மட்டியப்பன். .

so స్మోక

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/65&oldid=581260" இருந்து மீள்விக்கப்பட்டது