பக்கம்:தேன்மழை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதாவின் தேன்மழை

16


கிளம்பிற்றுக் கப்பல், வீரர்

    கிளம்பினர்; அவர்க ளோடே 

இளம்பெரு வழுதி சென்றான்.

    என்னானான்? உலகின் வீரம் 

அளந்தவன் கடலுள் மாய்ந்தான்!

   அனைவரும் வெறுங்கூ டானார் 

விளம்பரக் கடலின் கோபம்

   விட்டதோ முச்சங் கத்தை!





பொடிமணல் உலகைச் சூழ்ந்த

     போர்க்கடல்; மாந்தர் தம்மை 

வடிந்திடா நீரி னாலே

     வஞ்சிக்கும்; அதுபோல் வண்ணக் 

கொடிநமை வஞ்சிக் காது

     கொல்லாதென் றறிந்தும்; நாமோ 

கொடியினை யன்றோ வஞ்சிக்

     கொடியென்று கூறு கின்றோம்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/18&oldid=495471" இலிருந்து மீள்விக்கப்பட்டது