பக்கம்:தேன்மழை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                           காடு
                                   (கிளிக்கண்ணி)


கார்த்திகை தீபமெனக்

     காடெலாம் பூத்திருக்கும்

பார்த்திட வேண்டுமடீ-கிளியே

     பார்வை குளிருமடீ!




காடு பொருள்கொடுக்கும்

     காய்கனி ஈன்றெடுக்கும்

கூடிக் களித்திடவே-கிளியே

     குளிர்ந்த நிழல்கொடுக்கும்.




குரங்கு குடியிருக்கும்

     கொம்பில் கனிபறிக்கும்

மரங்கள் வெயில்மறைக்கும்-கிளியே

     வழியில் தடையிருக்கும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/21&oldid=495468" இலிருந்து மீள்விக்கப்பட்டது