பக்கம்:தேன் சிட்டு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


{ தேன் சிட்டு தோன்றும் அதன் கரிய அலகை நான் ஊன்றிப் பார்த்திருக்கிறேன். அதிலே பொன் மயமான மக ரந்தத் துாள் ஒட்டியிருக்கும். தேன் சிட்டுத் தன் அலகால் ஒரு மலரிலுள்ள மகரந்தத் துரள் மற்ருெரு மலருக்குச் சேர்ந்து அம்மலர் பயன் பெறுமாறு செய் கின்றது. இவ்வகையில் மரம், செடி, கொடிகளின் இனம் பெருகி ஒங்குவதற்கு இந்தத் தேன் சிட்டு உதவுகிறது. உண்ட வீட்டுக்கு உவந்து தொண்டு புரியும் இச்சிட்டின் தன்மை என் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது. தேன் சிட்டிற்குப் பின்னுல் எங்கள் தோட்டத் திற்கு வருவது மைன. இதை அழகுநாக்குருவி என் பார்கள். அழகாகப் பேசக்கூடிய திறமைவாய்ந்த சிறு பறவையாதலால் இதற்கு அப்பெயர் வந்திருக் கிறது. மைனுவைப் பெரும்பாலும் இணையாகவே காண லாம். ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பெரிதும் பிரியாமலிருந்து இரை தேடும். மைன நிலத்தில் அமர்ந்தே பூச்சி பிடிக்கின்றது. தேன் சிட்டைப்போலவே கரிக் குருவியும் மைனு வும் வேருெரு வகையில் பயிர் பச்சைகளுக்கு உதவு கின்றன. பயிர்களையும், செடிகளையும் அழிக்கும் புழுக்களையும், விட்டில் முதலிய பூச்சிகளையும் வேட்டையாடி அவை ஒழிக்கின்றன. தாவரங்களில் இனவிருத்திக்குத் தேன் சிட்டு உதவுகிறதென்ருல், அவற்றிற்குத் தீங்குசெய்யும் பகைவர்களை ஒழிப்பதில் மற்ற இரண்டு குருவிகளும் உதவுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/10&oldid=926602" இருந்து மீள்விக்கப்பட்டது