பக்கம்:தேன் சிட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தேன் சிட்டு


இழைப்பதில்லை; பூச்சி, புழுக்களின் இனங்களுக்கே அது கொடுமை செய்கிறது. மனிதன் தனது உணவுத் தேட்ட முயற்சியிலே மற்ற இனங்களுக்குக் கொடுமை செய்வதோடு தன் இனத்திற்கும் கொடுமை சூழ்கின்றன. அந்த வகையில் அவன் மைனாவுக்கும் ஒருபடி தாழ்ந்து விடுகின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.

மனிதன் தனக்குள்ள அறிவாற்றலின் உதவியால் கொடுமை தவிர்த்து வாழ முடியும். தேன் சிட்டின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்பது அவனுக்கு அரிதல்ல. அவனுடைய அறிவு அதற்கு வேண்டிய வழிகளை நிச்சயமாக வகுக்கும். அன்பிலே தோய்ந்த பரந்த மனப்பான்மையும், தேன் சிட்டையே பின்பற்ற வேண்டும் என்ற உறுதியுமே தேவை.

எங்கள் சிறிய தோட்டத்திலே தேன் சிட்டைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இந்த எண்ணம் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/13&oldid=1141377" இலிருந்து மீள்விக்கப்பட்டது