பக்கம்:தேன் சிட்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆமையும் முயலும்

15


வதை நான் இங்கு குறிப்பிடவில்லை; கற்பனைத் திறனையே நான் உள்ளத்திற்கொண்டு பேசுகிறேன். எவ்விதமான மனக்கோட்டை கட்டுகிறவனும் அதற்குத் தன்னையே நாயகனாகக் கொள்ளுகிறான். வாழ்க்கை யிலே தன்னால் சாதித்துக்கொள்ள முடியாத இச்சை களை அவன் தன் ஆகாயக் கோட்டையிலே அனுபவித்து ஒருவிதமான உளநிறைவு பெறுகிறான். இவ்வித மனக்கோட்டை வேறு, கற்பனை வேறு. கற்பனை யிலே கற்பனை செய்பவனே நாயகனாக இருக்க வேண்டுமென்பதில்லை. இன்றிருப்பதைவிட இன்னும் சிறந்த அழகும், இன்பமும், உயர்வும் உலகத்திலே கண்டாகவேண்டுமென்று ஏங்கித் தவிக்கும் கற்பனையையே நான் கருத்திற்கொண்டுள்ளேன். அத்தகைய கற்பனையில்லாதவிடத்து அரிய பெரிய செயல்களைக் காண முடியாது. செயலிலே ஈடுபடுகிற வனுக்கும் கற்பனை இருக்கவேண்டும். கவிஞர்களும் கலைஞர் களும் சிந்தனையாளர்களும் தமது கற்பனைத் திறனால் ஒரு புதிய இன்ப உலகத்தை நமக்குக் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றம் சாத்தியமாகும்.

கவிஞனை மனத் திடனில்லாதவனேன்று தன்னம்பிக்கையற்றவனென்ருே கூற முடியாது. "வண்மை யில்லையோர் வறுமையின்மையால்..... உண்மை யில்லை பொய்யுரையிலாமையால்” என்று கற்பனை செய்வதற்கு எவ்வளவு மனத்திடனும் துணிச்சலும் வேண்டும்!

எண்ணிப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் முயலாக இருப்பான்; வேறொரு வகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/16&oldid=1141405" இலிருந்து மீள்விக்கப்பட்டது