பக்கம்:தேன் சிட்டு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆமையும் முயலும் i . ASAS SSAS SSAS ஆமை முயல் கதையில் தொடங்கி நான் எங் கேயோ பறந்துவிட்டேன். ஆமைபோல அசை வற்றுக் கிடக்க விரும்பும் நான் மனத்திலே எ படி யெல்லாம் வேகமாகப் பறக்க விரும்புகிறேன் என் பதை இதிலிருந்து நீங்கள் கண்டுகொள்ளலாம். ஆனல் தத்துவ விசாரணை செய்வது இங்கு எனது நோக்கமல்ல. வேகம் மிகுந்த முயலே ஊர்ந்து அசையும் ஆமை வெல்லவேண்டும் என்று உலகம் ஆசைப்படுகிறது. இல்லாவிட்டால் இந்த ஆமை முயல் போட்டிக் கதையிலே மக்களுக்கு நிரந்தரமாக இத்தனை இன்பம் பிறக்காது. ஊர்ந்து செல்லும் பிராணி ஒட்டம் மிகுந்த பிராணியை வெல்லவேண்டும் என்று மக்களின் உள்ளத்திலே பரிவு சுரக்கின்றது. இந்தப் பரிவு நிலைத்திருக்கும் வரையில் மனித இனத்திற்கு உய்வுண்டு என்பது எனது திடமான நம்பிக்கை. ஆமை முயலை வெல்லக்கூட வேண்டாம்; முயலோடு கூடவே செல்லவாவது உதவலாம் என்ற பரிவு எல்லோருடைய உள்ளத்திலும் தழைக்கவேண்டும். அப்பரிவு தழைத்திடும்போது போட்டி தானகவே மறைந்துவிடும். முயல் தன் முதுகிலேயே ஆமையைச் சுமந்து செல்லவும் பரிவோடு முன்வரும்போது போட்டி ஏது? போட்டியில்லாது, அனைவரையும் உடன்கூட்டிச் செல்லவேண்டுமென்ற பரிவுடைய மனப்பான்மை ஓங்கவேண்டும். ஆமை முயல் கதையை நினைக்கும்பொழுதெல்லாம் எனக்கு இந்த ஆசை உண்டாகிறது. ஆமையிடம் மக்கள் காட்டும் பரிவைபுணர்ந்துநம்பிக்கையும் கூடவேபிறக்கின்றது. திே. 乳一2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/18&oldid=926610" இருந்து மீள்விக்கப்பட்டது