பக்கம்:தேன் சிட்டு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


க்ரிலச் சக்கரம் #9 காலச் சக்கரத்தின் சுழற்சியிலே அதன் அடியிலே வீழ்ந்து எத்தனை எத்தனை உயிர்கள் அழிந்துவிட்டன! எத்தனை எத்தனை நாகரிகங்கள் நசுங்கிவிட்டன! எத்தனை எத்தனை கலைகள், எத்தனை எத்தனை சாஸ்தி ரங்கள், எத்தனை எத்தனை காவியங்கள் மறைந்து விட்டன! காலச் சக்கரத்தில் சிக்காத கலை இல்லை; கவிதை இல்லை; சமூகமில்லை; நாகரிகமில்லை. உலுத்துப் போனவை யெல்லாம், வலுவற்றவை யெல்லாம் அதன் அடியிலே நொறுங்கிப் போகும்; மங்காத ஜீவனுள்ளவை உரம் பெற்று நிமிர்ந்தோங்கும்; காலச் சக்கரத்தையே அனுயாசமாகச் சிங்க நோக்கு நோக்கி நிற்கும். காலச் சக்கரம் அதைப் பொருட்படுத்துவதில்லை. காலில் விழுந்து நொறுங்குவதும், காலுக்கு அகப் படாது தலை நிமிர்ந்து நிற்பதும் அதற்கு ஒன்றுதான். அவை இரண்டையும் ஒரே நோக்கோடு பார்த்துக் கொண்டு காலச்சக்கரம் போகிறது. கண்ணை மூடிக் கொண்டு போகிறது என்றுகூடச் சொல்லலாம். காலச் சக்கரம் சிறந்த நீதிபதி, தாட்சண்ணிய மற்றது; விருப்புவெறுப்பற்றது. உண்மையான தீர்ப்பே அதன் ஒட்டம். காலச் சக்கரம் எத்தனை வாழ்வைப் பார்த்திருக் கிறது. எத்தனை போரைப் பார்த்திருக்கிறது: அவற்றிற்கெல்லாம் அது மோனச் சான்று. வாழ்வின் இன்பத் துளிகளையும், போரின் துன்பக் கண்ணிரை யும் அது ஒரே மனப்பாங்குடன் ஏற்றுக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/20&oldid=926612" இருந்து மீள்விக்கப்பட்டது