பக்கம்:தேன் சிட்டு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன் சிட்டு

உருளுகின்றது. அதன் உள்ளத்திலே கருணையில்லையா? அகன் .z...... frs r"* リぶ。労 .سبسیامر میس، جیم است « * உணர்ச்சியே இல்லையா? ன் உள்ளம் வெறும் تنها :

  • *

கருங்கல்லா? காதலின் உயர்வைக் காலச் சக்கரம் பார்த்திருக் றது; காமத்தின் இழிவையும் அது பார்த்திருக் 1றது. இராவணனுடைய காமத்தீ அரக்கர் குலத்தைச் சுட்டெரித்தது காலச் சக்கரத்திற்குத் தெரியும்; ஷாஜஹானின் உயிர்க் காதல் கலைமணி اسمه قيمبي யான தாஜ்மஹாலாக வடிவம் பெற்றதும் அதற்குத் தெரியும். அன்பு, கருணை முதலிய உயர்ந்த உணர்ச்சி களின் அருஞ்செயல், பொருமை, கோபம் முதலிய இழிந்த உணர்ச்சிகளின் கொடுமை ஆகிய அனைத் தையும் காலச் சக்கரம் கண்டிருக்கிறது. எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டு அது மெளனமாகப் போய்க்கொண்டே இருக்கிறது. அதன் மெளனத்தின் பொருளைக் காண்பவர்கள் அருமையிலும் அருமை. அப்படிக் காண்பவர்களே பாக்கியவான்கள். அவர் களுக்கே காலச் சக்கரம் வந்த வழி தோன்றுகிறது, அது செல்லும் பாதையும் தோன்றுகிறது. காலச் சக்கரத்தில் கட்டுண்ணுமல் தனித்து அப்பால் நின்று சிருஷ்டியின் விளையாட்டைப் பார்க்க அவர்களுக்கே இயலும், மற்றவர்களெல்லாம் காலச் சககரத்தில் கட்டுண்டவர்களே. காலச் சக்கரம் என்று தேய்ந்து விழும்? அதன் ஒட்டம் என்று ஒயும்? கற்பனை செய்யவே முடிய வில்லை. அதன் ஆரக்கால்களின் ஆணிக் குமிழ்களே இன்னும் தேயவில்லை. அப்படியிருக்கக் காலச்சக்கரம் எப்பொழுது தேயப் போகிறது? அது தேயவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/21&oldid=926613" இருந்து மீள்விக்கப்பட்டது