பக்கம்:தேன் சிட்டு.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உள்ளத்தின் விரிவு


நிலைமைக்குத் தக்கவாறு உள்ளம் விரிவடை வேண்டும். இல்லாவிட்டால் மனித இனம் நிலைப் பெற்று வாழ முடியாது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே சிக வினோதமான உயிர்ப் பிராணிகள் இந்த உலகத்திகே வாழ்ந்து வந்தன. மாறுகின்ற உலக நிலைமைக்கு ஏற்றவாறு அவைகளால் தம்மை மாற்றி அமைத்துக கொள்ள முடியாமற் போனதால் அவை பூண்டோடு அழிந்து போயின. மண்ணிற் புதைந்து கிடந்த அவற்றின் எலும்புக் கூடுகள் சிலவற்றைக் கண்ட பிறகே அவ்வாறான உயிரினங்கள் இருந்தனவென்று மனிதனுக்குத் தெரியவந்தது.

அந்தப் பிராணிகளுக்கு ஏற்பட்ட கதி அவற் றிற்கு மட்டும் தனிப்பட்டதல்ல. அது பொதுவான நியதி. நிலைமைக்கு ஏற்றவாறு தம்மை அமைத்துக் கொள்ளத் தெரியாத எல்லா உயிரினங்களுக்கும் அதே கதிதான் நேரும்; மனிதனும் இந்த நியதிக்கு விலக்கல்ல.

இது அணுகுண்டு யுகம். அணுகுண்டையும் பின்னால் தள்ளிவிட்டு ஹைடிரஜன் குண்டு தோன்றி யிருக்கிறது. அதைவிடக் கொடிய படைகளையும் உண்டாக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.