பக்கம்:தேன் சிட்டு.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23
உள்ளத்தின் விரிவு


இந்த நிலையிலே மனிதன் பழைய பத்தாம்பசலியாக இருக்க முடியாது. அவன் உள்ளம் புதிய நிலைமையைச் சமாளிக்கக்கூடிய வகையில் மாறவேண்டும்.

அணுகுண்டு யுகத்திலே போர் ஏற்படுமானால் மானிட சாதியே அழிந்து போகும். இரண்டாம் உலக யுத்தத்திலே மாண்டு போன மக்களைவிட அதிகம் பேரை இன்று ஒரே நாளில் வீட்டிலிருந்த படியே அணுகுண்டை ஏவி மடித்துவிடலாம்; பெரிய பெரிய நகரங்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்படி ஒரு நாழிகையிலே செய்து விடலாம். வல்லரசுகளின் கையிலே இன்றைக்கிருக்கிற அனுப்படைகளே உலகத்தைத் தூளாக்கப் போதும். அதனால்தான் இனிமேல் போர் ஏற்படக் கூடாது என்கிறேன்.

போரை ஒழிப்பதற்கு என்ன செய்யவேண்டும்? அதற்குத்தான் நமது உள்ளம் மாறவேண்டும், விரிய வேண்டும், புதிய நிலைமைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும்.

உள்ளம் மாறவேண்டும் என்று கூறுவதைவிட உள்ளம் விரியவேண்டும் என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஆதி மனிதன் பெரும்பாலும் விலங்குகளைப் போலத் தன்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந் தான். தனது இன்பம், தனது வயிறு-இவற்றிலேயே அவனுக்கு நாட்டம். ஆனால் நாளடைவிலே அவனுடைய எண்ணம் கொஞ்சங் கொஞ்சமாக விரியத் தொடங்கியது. மனைவி, மக்கள், குடும்பம்,