பக்கம்:தேன் சிட்டு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளத்தின் விரிவு

25



களும் முற்றிலும் மறையவேண்டும். உலகத்தின் ஒரு மூலையிலே ஒருவனுக்குத் துன்பமேற்பட்டால் மற்றொரு மூலையிலே இருப்பவனுக்கு இயல்பாகவே பரிவு ஏற்படவேண்டும். 'என்னைப்போன்ற ஒருவன் என்னுடன் பிறந்தவன் அங்கே துன்புறுகிறானே, அந்தத் துன்பத்தை நீக்க நான் வழி காணவேண்டும்' என்ற எண்ணம் இயல்பாக உண்டாகுமாறு மனிதனுடைய உள்ளம் விரிவடைய வேண்டும்.

இது ஒன்றே மானிட சாதியை இன்று அழியாது காக்கக்கூடிய சக்தியாகும். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று இராமலிங்க சுவாமிகள் மனமுருகிப் பாடினார். பயிர் வாடுவதைக் கண்டால் அவருடைய உள்ளம் வாடிறறு. ஒரு மண்கட்டியின் உருவத்தை யாராவது காலால் மிதித்துச் சிதைத்துவிட்டால் அதைக்கூட அவரால் சகிக்க முடியவில்லையாம். அப்படி அந்த அடிகளாருடைய உள்ளம் விரிவடைந்து பயிர்களுக்கும், உயிரே இல்லாத மண்கட்டிக்கும் பரிவு காட்டியது.

மனித உள்ளம் எந்தப் பேரெல்லைக்கு விரியக் கூடும் என்பதைச் சான்றோர்களின் வாழ்க்கையிலிருந்து அறிகிறோம். அந்த அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் எட்டாததாக இருந்தாலும் மனித இனத்தை வேறுபாடின்றி நேசிக்கும் அளவுக்கு அவன் போகலாம். போகவேண்டிய நெருக்கடி இன்று ஏற்பட்டிருக்கிறது. மனிதன் இந்த நிலையிலே எப்படித் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளுகிறானே அதைப் பொறுத்திருக்கிறது அவனுடைய இனத்தின் எதிர்காலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/26&oldid=1142030" இலிருந்து மீள்விக்கப்பட்டது