பக்கம்:தேன் சிட்டு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முருங்கைமர வேதாளம்


விக்கிரமாதித்தன் கதை என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? அதை முப்பத்திரண்டு பதுமை: கதை என்றும் சொல்லுவார்கள். விக்கிரமாதித்தன் வீற்றிருந்த உயர்ந்த அரியணையின் படிகளிலே முப்பத்திரண்டு அழகான கன்னிப் பதுமைகள்: இருந்தனவாம். பிற்காலத்திலே போஜன் என்னும் பேரரசனுக்கு இந்த அரியணை ஒரு கம்புக் கொல்லையிலிருந்து கிடைத்ததாம். அவ்ன் பெரிதும் மகிழ்ச்சியடைந்து. அதைத் தனது அரியணையாகக் கொள்ளக் கருதினான். தனது கொலுமண்டபத்திலே அதை அமைத்து மங்களமான ஒரு நல்வேளையிலே அதில் அமர நினைத்து முதற்படியில் காலெடுத்து வைத்த போது அந்த முப்பத்திரண்டு பதுமைகளும் கலீரென்று நகைத்தனவாம். போஜன் திடுக்கிட்டு நின்று அந்தப் பதுமைகளைப் பார்த்து அவைகளின் சிரிப்புக்குக் காரணமென்னவென்று கேட்டான். அப்பொழுது ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பதுமையாக விக்கிரமாதித்தனுடைய உயர்ந்த பண்புகளையும் அறிவு நுட்பத்தையும் எடுத்துக் கூறிற்றும்.

பதுமைகள் கூறிய கதைகளிலே விக்கிரமாதித்த னுடைய அறிவு நுட்பத்தைச் சோதித்த வேதாளம் ஒன்று கேட்ட சிக்கலான கேள்விகளும் அவற்றிற்கு விக்கிரமாதித்தன் அளித்த விடைகளும் அடங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/27&oldid=1395329" இலிருந்து மீள்விக்கப்பட்டது