பக்கம்:தேன் சிட்டு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


空$ தேன் சிட்டு போகிறது; அந்தச் சமயம் பார்த்து வேதாளங்கள் யதேச்சையடைத்து மனிதனுடைய தலைமேலேறிக் ^ கொண்டு கூத்தாடத் தொடங்கிவிடுகின்றன. தன்னலம் என்கிற வேதாளந்தான் இந்தக் கூட்டத்திற்கே தலைமை வகிப்பது. அதனுடைய ஆதிக்கத்தினுலே மனிதன் படுகின்ற தொல்லைகள் கொஞ்சமல்ல, மனிதனுடைய தொல்லைகளுக்கெல் லாம் அடிப்படைக் காரணம் அதனுடைய வேலை தான் என்றுகூடச் சொல்லலாம். அந்த தன்னல வேதாளத்திற்குப் பக்கபலமாக இருப்பவைகள் போர், பகைமை, வெறுப்பு, பொருமை முதலிய வேதாளங்கள். இவற்றைத் தன்னலத்தின் குழந்தை கள் என்றே சொல்லவேண்டும். மனிதன் இவை களுக்கு இடங்கொடுப்பதாலேயே உலகத்தில் துன்பம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிறது. உலகத்திலே பல பெரிய மகான்கள் தோன்றி யிருக்கிரு.ர்கள். அவர்கள் மனித சாதியின் நன்மைக் காகப் பல அரிய உபதேசங்களை அருளியிருக்கிருர்கள். அன்பு, சத்தியம், அஹிம்சை ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு வாழ்வோமானல் உலகத்தில் துன்பமே இராது. உலகம் கந்தர்வ லோகம் போல இன்ப நாடாகிவிடும் என்று அவர்கள் நமக்கு நன்கு எடுத்துக் காட்டியிருக்கிருர்கள். புத்தர், இயேசு கிறிஸ்து, காந்தியடிகள், அப்பர் சுவாமிகள், இராம கிருஷ்ண பரமஹம்சர், இராமலிங்க சுவாமிகள் முதலியோர், ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செயல் வேண்டும், அன்பு செயல் வேண்டும்” என்று வற் புறுத்தி முழங்கியிருக்கிருர்கள். அன்பே இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/29&oldid=926621" இருந்து மீள்விக்கப்பட்டது