பக்கம்:தேன் சிட்டு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருங்கைமர வேதாளம் 3} வேரற்றுப் போகும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையிலும் மனிதன் விழித்துக் கொள்ளா விட்டால் அவனுக்கு உய்வில்லை. மனிதன் தனது அறிவின் திறத்தைப் பற்றிப் பெருமைப்படுகிருன்; அவன் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு கருவங் கொள்ளுகிருன். ஆனல் உன்மையான முன்னேற்றம் மனிதனுடைய விலங்குணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவ்தில் இருக்கின்றது. விலங்குணர்ச்சி களைத் தேவ உணர்ச்சிகளாக மாற்றவேண்டும். அன்பு, அருள் ஆகிய மென்மை யுணர்ச்சிகள் ஆட்சி புரியவேண்டும். அதுவே நிலையான இன்பத்திற்கு வழி கோலும் முன்னேற்றம். - அனுப் படையின் வலிமையைப் பெருக்கிக் கொண்டே போனல் மனித சாதிக்கு முடிவு ஏற்பட்டு விடும் என்று சி ற ந் த சிந்தனையாளர் பலர் எச்சரிக்கை செய்திருக்கிருர்கள். அதை நினைத் தாவது மனிதன் விழிப்படைய வேண்டும்; தன்னலம் முதலிய வேதாளங்களைக் கட்டிப்பிடித்து அடக்கி ஆள வேண்டும். விக்கிரமாதித்தனைப் போல அந்த முயற்சியிலே விடாப்பிடியாக நிற்க வேண்டும். விக்கிரமாதித்தன் தனது திறமையாலும் முயற்சி யாலும் விக்கிரம சகாப்தம் என்ற ஒரு புதிய சகாப்தத்தையே உண்டு பண்ணககூடிய தகுதி பெற்ருன். நாமும் நமது உயர்ந்த உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கச் செய்யும் முயற்சியில் வெற்றி. பெற்ருல் இன்ப வாழ்க்கையாகிய புதிய சகாப் தத்தை உலகம் முழுவதிலும் தோற்றுவிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/32&oldid=926625" இருந்து மீள்விக்கப்பட்டது