பக்கம்:தேன் சிட்டு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முரண்பாடுகள் இந்த உலகம் எல்லா நலன்களையும் பெற்று இன்பமாக இரு அதுதான் என்னுடைய این گ ஆசை” என் ஒரு பெரியவர். எதற்காக உலகம் நலமாக இருக்கவேணும் ? எல்லா நலன்களும் கிடைத்து இன்பத்தோ டிருந்தால் மனிதன் விலங்காகிவிட மாட்டான ?” G என்று பதட்டத்' தாடு ஒரு வழுக்கைத் தலையர் கேட்டார். தாம் கூறிய இந்தக் கருத்திற்காவது எதிர்ப்போ மாறுபாடோ இராது என்று பெரியவர் எதிர்பார்த் திருந்தார். இதிலும் அவர் ஏமாற்றமடைய நேரிட்டது. இன்றைய உலகம் முரண்பாடுகள் நிறைந்தது; முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களிலே நம்பிக்கை கொண்டது. எதை ஒரு பகுதி வேண்டும் என்கிறதோ அதையே மற்ருெரு பகுதி வேண்டவே வேண்டாம் என்கிறது. படை வலிமையைப் பெருக்குவதின் மூலமே உலகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பது இன்றைய உலகத்தில் உலவி வரும் ஒரு கருத்து. படைகளையெல்லாம் கடலிலே தூக்கி எறிந்துவிட்டு அஹிம்சை வழியைப் பின்பற்றில்ை தான் உலகத்தில் போரின்றி அமைதி நிலவும் என்பது அதற்கு நேர்மாருக உலவிவ்ரும் மற்ருெரு கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/33&oldid=926626" இருந்து மீள்விக்கப்பட்டது