பக்கம்:தேன் சிட்டு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
தேன் சிட்டு


யைப் பெருக்குவதுபோல அந்தக் குழலோசை வானிலே மிதந்தது. எதிர்பார்த்திருக்கும் இன்பத்தைப்பற்றிய நினைவிலே எழுந்த கிளர்ச்சியால் அந்த இசை உருக்கொள்ளுவது போலத் தோன்றியது. கழனி வெளியிலே குபுகுபுவென்று பனி பெய்கின்ற அதிகாலையிலே அணியறியாத அந்தக் குழல் இசை யின் மெல்லிய நாதம் எங்கும் பெருகியது. உலகம் கந்தர்வலோகமாக மாறிவிட்டது.

நான் அந்த இசையை அனுபவித்துக்கொண்டே அடியெடுத்து வைத்தேன். ஒரு மரத்தடியிலே கல்லின் மேல் அமர்ந்து ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். மெதுவாக அவனிடம் சென்றேன்.

குழல் வாசிப்பதை நிறுத்திவிட்டு அவன் என்னை உற்றுப் பார்த்தான். அந்தப் பக்கத்திற்கே புதியவனை ஒருவன் அதிகாலையிலே அங்கு வந்தது அவனுக்கு வியப்பை உண்டாக்கியிருக்கிறது என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது.

"புல்லாங்குழல் மிக இனிமையாக இருக்கிறது" என்று பேச்சைத் தொடங்கினேன்.

சிறுவன் மகிழ்ச்சியால் சிரித்தான்; ஆனால் பதில் ஒன்றும் பேசவில்லை.

"அதிகாலையில் குழல் ஊதுகிறாயே, என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.

"மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் நாலு நாள் தானே? ஊதிப் பழகவேண்டாமா?" என்றான் சிறுவன்.