பக்கம்:தேன் சிட்டு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


క్షీ தேன் சிட்டு பொன் மஞ்சட் கிரணங்களுக்கும் பணித் திவலைகளுக் கும் போட்டியேற்பட்டுவிட்டது. ஆனால் அந்தப் போட்டிக்கிடையிலும் அறுகம்புல்லின் நுனியில் உருண்டு நிற்கும் முத்துச் சொட்டிலே புகுந்து பொற் கதிர்கள் வர்ண ஜாலங்களை வெளிப்படுத்துவதில் தவறவில்லை. பெரிய பண்ணைக்காரர் எதிரிலே வந்துகொண் டிருந்தார். நான் அவரை இதுவரை பார்த்ததில்லை. அறிமுகமில்லாதிருந்தாலும் அன்போடு அவர் என் னிடம் உரையாடலானர். நாட்டுப் புறத்தின் இயற்கையெழிலைத் துய்க்க நான் வந்திருப்பதை அவரிடம் கூறினேன். 'பொங்கல் நோன்பு வருகிறது. எங்கள் வீட்டி லேயே இருந்துவிட்டுப் போகவேனும்’ என்று அவர் பரிவோடு கூறினர். பொங்கலுக்கு எங்கள் வீட்டிற்கே போகலா மென்றிருக்கிறேன்” என்று நான் மறுமொழி சொன்னேன். "இதுவும் உங்கள் வீடுதான். மனமிருந்தால், அன்பிருந்தால் எல்லாம் சொந்தந்தான்” என்ருர் பண்ணைக்காரர். "உங்கள் உள்ளம் மிகவும் பரந்த உள்ளம். உல கத்திலே எல்லோரும் உங்களைப்போல இருக்கிருர் களா?” என்று உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சியை அப்படியே கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/43&oldid=926637" இருந்து மீள்விக்கப்பட்டது