பக்கம்:தேன் சிட்டு.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45
அன்பு வழி


கொள்ளவும் முடியாது. ஆனால் மனிதனுடைய நிலை அப்படிப்பட்டதன்று. மனிதன் தனது வரலாற்றை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு எழுதி வைக்கிறான். பின்னால் வருகிற சந்ததியர்கள் அதைப் படித்துப் பயனடையலாம். உலகத்தின் ஒரு மூலையிலுள்ள ஒரு மனிதக் கூட்டத்தின் வரலாற்றை மற்றொரு கோடியிலுள்ள மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அந்தக் கூட்டத்தார் அடைந்த அனுபவங்களைக் கொண்டு உலகத்திலுள்ள எல்லா மக்களும் தங்கள் வாழ்க் கையைத் தக்கவாறு மாற்றி அமைத்துக்கொண்டு நல்ல பயனடையலாம்.

மெய்தான்; நல்ல பயனடைந்து முன்னேறலாம் என்பதில் ஐயமில்லை. ஆனல் மனிதன் அப்படிப் பயனடைகிறானா? என்று ஆராயும்போதுதான் நம்பிக்கை குலைகிறது. வரலாற்றுப் பாடம் பள்ளிகளிலே தேர்வு முடிந்ததும் மறந்து போவதாகத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் முன்னோர் செய்த தவறு களையே மக்கள் திரும்பத் திரும்பச் செய்வார்களா?

வரலாற்றைப் படிப்பதால் நாம் தெரிந்து கொள்ளுகிற பாடத்தைப் பற்றி பெர்னாட்ஷா தமக்கே உரிய பாணியிலே அழகாகக் கூறியிருக்கிறார்.

"வரலாற்றைப் படித்து நான் ஒன்று தெரிந்து கொண்டேன்; அதாவது வரலாற்றைப் படிப்பதால் நாம் ஒன்றுமே தெரிந்து கொள்வதில்லை” என்று அவர் கூறுகிறார். உண்மையான வாக்கு. ஒரு முறை