பக்கம்:தேன் சிட்டு.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேன் சிட்டு


செய்த தவறை நாம் உணர்ந்து கொண்டதற்கு அடையாளம் அதை மீண்டும் செய்யாமலிருப்பதே ஆகும். இதுவரையில் மானிட சாதி செய்த பல தவறுகளை வரலாறு நமக்கு வெளிப்படையாக எடுத்துக் காட்டுகிறது. அவற்றைப்பற்றியெல்லாம் படிக்கிறோம்; அவை பெரிய தவறுகள் என்று விமரிசனம் செய்கிறோம். ஆனால் அவற்றையே திருப்பித் திருப்பி நாம் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு வரலாற்றைப் படிப்பதால் என்ன பயன்?

போர் ஏற்படுவதால் எத்தனையோ துன்பங்கள் விளைகின்றன. ஒரு நாட்டின் பெருஞ் செல்வமாகிய இளைஞர்கள் ஆயிரம் ஆயிரமாக மடிகிறார்கள். நாட்டிலே பெருஞ் சேதம் ஏற்படுகிறது. முடிவிலே வெற்றி பெற்ற நாடும் நலிவையே அடைகின்றது. மகாபாரதக் கதை இந்த உண்மையை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறது. கெளரவர்கள் தோல்வியுற்று மடிந்தார்கள். பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களுடைய நிலைமை தோல்வியுற்றோரின் நிலைமையைவிட உயர்ந்ததாயிருக்கவில்லை. மடிந்த வர்கள் ஒரு வகையில் நல்ல புண்ணியம் செய்தவர் களாகத் தோன்றியது. அதற்குமேல் அவர்களைத் துன்பம் வாட்ட முடியாதல்லவா? ஆனால் வெற்றி பெற்று உயிர் வாழ்ந்த பாண்டவர்கள் இறந்து போன அத்தனை பேருக்காகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. ஆருயிர் மைந்தர்களையும், காதலர்களையும் இழந்தோரின் ஏக்கக் குரலை வாழ்நாளெல்லாம் அவர்கள் கேட்டு வருந்த வேண்டியதாயிற்று. போரால் யாருக்கும் நன்மை-