பக்கம்:தேன் சிட்டு.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47
அன்பு வழி


யில்லை என்பதை மகாபாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு எடுத்துக் காட்டி விட்டது. அதன் பிறகு நடந்த ஒவ்வொரு போரும் இதே உண்மையை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் யார் அதைச் சரிவர உணர்ந்திருக்கிறார்கள்? மறுபடியும் மறுபடியும் அதே தவறை உலகம் செய்து கொண்டுதானிருக்கிறது. வரலாற்றைப் படிப்பதால் நாம் ஒன்றுமே தெரிந்து கொள்வதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறதல்லவா?

"நூறு போர்களைச் செய்த பிறகும் நான் புதிதாக ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை; போரைப் பற்றி எல்லாம் எனக்கு தொடக்கத்திலேயே தெரியும்" என்று நெப்போலியன் ஒரு தடவை பெருமையடித்துக் கொண்டானாம். பாவம், அவனுடைய மூளைக்கு எட்டியது அவ்வளவுதான். ஆனால் அசோகன் ஒரே ஒரு போரைத்தான் நடத்தினான். அதிலேயே அவனுக்கு ஒரு புதிய உண்மை தெரிந்துவிட்டது. போர் என்பது மிகக் கொடுமை வாய்ந்தது; அதனால் யாருக்கும் எவ்வித நன்மையும் விளையாது என்று அவன் கண்டுகொண்டான்.

இவ்வாறு யாராவது ஒருவருக்கு உண்மை புலப் படுகிறது. அவர் அதை உலகுக்கு எடுத்துக் காட்ட முயலுகிறார். உலகமும் ஒரு பெரிய போரில் ஈடுபட்டுத் தத்தளிக்கும்போது இந்த உண்மையை அறிந்து கொண்டதுபோலக் குரல் எழுப்புகின்றது. ஆனல் அந்தப் போர் முடிந்த சில ஆண்டுகளுக்குள் அதனால் ஏற்பட்ட இன்னல்களே யெல்லாம் மறந்து-