பக்கம்:தேன் சிட்டு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4


வெவ்வேறு நூலிழைகளிலே கோத்த பலவகை மணிகளைக் கொண்டு ஒரு மாலைக் கட்டலாம்; ஒரே நூலிழையிலும் பல மணிகளைக்் கோர்த்து த்் மாலையாக்கலாமல்லவா? இவ்வாறு கோத்து மாலை யாக்கும் போது அந்த நூலிழைக்குப் பொருத்தமாக அமையாதனவாக மணிகளை விளக்க வேண்டி நேரும் என்பது சொல்லாமலே விளங்கும்.


இந்தத் தொகுதியிலே ஒரு சில கட்டுரைகளே சேர்க்் சேர்க்கப்பட்டுள்ள மைக்கு காரணம் இப்பொழுது விளங்கலாம். இன்று ஓங்கி முழங்க வேண்டிய வாழ்க்கை இலட்சியம் 'அன்பு செய்தல்' என்று ஒன்றேதான். அந்த மாணிக்க இழையிலே செல்லக் கூடிய எண்ணச் சித்திரங்கள் இங்கு கோவை செய்திருக்கிறேன்.

ஒரே இழையில் கோத்த மணிகளைக் கொண்ட மாலைக்கு இதனை ஒப்பிட்டேனல்லவா? மணிகளின் மதிப்பைப் பற்றி நான் சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது. ஆனால் இழை மட்டும் மாணிக்கம் என்பதைத் துணிச்சலோடு கூறுவேன்.

                   பெ. துரன்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/5&oldid=1137627" இருந்து மீள்விக்கப்பட்டது