பக்கம்:தேன் சிட்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அமைதியும் இன்பமும்

காலை வேளை. நாட்டுப்புறத்திலே ஒரு பண்ணை. ஆட்டுக்குட்டி ஒன்று தாயிடத்தே பாலருந்திவிட்டுத் துள்ளி விளையாடுகிறது. ஆயிரம் ஆயிரமாகப் பொன் மஞ்சள் நிறம் விரித்துக் குலுங்கும் சாமந்தி மலர் களுக்குத் தோட்டக்காரன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். மேய்வதற்காக மாடுகளைப் புல் வெளிக்கு ஒட்டிச் செல்லும் சிறுவன் ஒருவனுடைய தெம்மாங்குப் பாடல் தொலைவிலே கேட்கிறது.

கழனிகளின் இடையிலே அவையெல்லாம் எனக்கு இன்பந் தந்தன. அமைதியையும் ஓய்வையும் நாடிச் சென்றிருந்த என் உள்ளத்திற்கு அருமருந்தாக அவை வாய்த்தன.

அங்கே பரபரப்பைக் காணோம். காலம்கூட மெதுவாகக் காலெடுத்து வைப்பது போலத் தோன்றியது. பட்டணத்துக்கும் அந்த இடத்துக்கும் எத்தனை வேறுபாடு!

அந்த அமைதியான பண்ணைக் காட்சியைக் காலை இளவெயிலிலே நெடுநேரம் துய்த்துவிட்டு நான் தங்கியிருந்த வீட்டிற்குப் புறப்பட்டேன்.

வீடு அந்தப் பண்ணையிலேயே ஒரு மேட்டுப் பாங்கான பகுதியில் இருக்கிறது. பனையோலை வேய்ந்த சிறிய குச்சுவீடு. மின்சார விளக்கு முத-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/53&oldid=1395336" இலிருந்து மீள்விக்கப்பட்டது