பக்கம்:தேன் சிட்டு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தேன் சிட்டு


பொருளை அபகரிக்க வேண்டியதுமில்லை” அவன் கபடமில்லாமல் வெளிப்படையாகப் பேசினான்.

அவனுடைய கொச்சை மொழிகளிலே ஆழ்ந்த உண்மை பொதிந்து கிடப்பதை நான் உணர்ந்தேன். எனது சிந்தனை எங்கெல்லாமோ பறந்தது. உலகத்திலே அமைதியைக் காண்பதற்கு, இந்தத் தோட்டகாரனுடைய வாழ்க்கைத் தத்துவம் நல்ல வழி காண்பிக்கும் என்று எனக்குத் தோன்றியது. "தானும் வாழவேணும், மற்றவர்களும் தன்னைப் போலவே நலமாக வாழவேணும்” என்று ஒவ்வொருவரும் நினைத்தால் எல்லோரும் வாழ்வார்கள்; உலகம் இன்ப வீடாகும்.

இவ்வாறு எண்ணிக்கொண்டு நான் மெளனமாக நிற்பதைக் கண்டு தோட்டக்காரன் சாமந்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றுவிட்டான். ஆட்டுக்குட்டி மட்டும் அருகிலே நின்று என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/59&oldid=1153260" இலிருந்து மீள்விக்கப்பட்டது