பக்கம்:தேன் சிட்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பல்லி வாழ்க்கை

படம் இல்லாத வீடுண்டா? அப்படிப்பட்ட வீட்டை நான் இதுவரை பார்த்ததில்லை. எந்த வீட் டுக்குப் போனலும் அதன் சுவர்களில் படங்கள் தொங்குகின்றன. தெய்வங்களின் வெவ்வேறு வகை யான கோலங்கள்தாம் பெரும்பாலும் காட்சியளிக்கும். தெய்வ நம்பிக்கையற்றவனுக்கும் இந்தப் படத்தின் பக்தி மட்டும் குறைவதில்லை. அவன் நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் படங்களை மாட்டி வைக்கிறான்; இல்லாவிட்டால் கலையின் பெயரால் சுவரை அழகு செய்ய முயல்கிறான். தனக்குப் பிடித்தமான ஆட்டக்காரர்கள், சினிமா நட்சத்திரங்கள், முற்போக்குச் சிற்பிகள், பேனா மன்னர்கள், புரட்சி வீரர்கள் என்றிப்படிப்பட்டவர்களின் படங்களிலே மனதைப் பறிகொடுத்தவர்கள் மிகப் பலர். அந்த ஆசையையும் துறக்க முயன்றவன் தன்னுடைய உருவப் படத்தையாவது மாட்டி வைப்பான். மனைவி மக்களின் உருவப் படங்களை எதிரிலே காட்சியாக வைத்துக்கொள்ள ஆசைப்படாதவர்கள் யார்? பள்ளியறையில் சான்றோர் படங்களை மாட்டுவோர் அதற்குக் கூறும் காரணங்களையும், நிருவாணப் படங்களை மாட்டுவோர் அதற்குக் கூறாத காரணங் களையும் நான் அறிவேன்.

இந்தப் படங்களிலிருந்து ஒருவனுடைய உள்ளப் பாங்கை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். அவ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/60&oldid=1395337" இலிருந்து மீள்விக்கப்பட்டது