பக்கம்:தேன் சிட்டு.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 தேன் சிட்டு அடிக்கோலை எடுத்துக்கொண்டு ஓங்கிய கை தானுகவே தணிந்தது. நெஞ்சிலே எண்ண அலைகள் மோதின. ,! அந்தப் பல்லியின்மேல் உனக்கேன் இத்தனை கோபம்? பகுத்தறிவில்லாத உயிர் அது. ஆனல் ஆறறிவுடைய மனிதர்கள் இப்படி மகான்களின் மறைவிலிருந்துகொண்டு .ெ கா டு ைம செய்வ தில்லையா?” என்று யாரோ கேட்பது போலிருந்தது. ஆசனத்தில் அமர்ந்து நான் சிந்தனையில் மூழ்கி னேன், மகான்களின் பெயரை மேடையின்மீது நின்று மக்கள் கூசாமல் முழங்குகிருர்கள். அவர்களைப் பின் பற்றுவதாக வேடமும் புனைகிருர்கள். ஆனல் சொல் லுக்கும் தோற்றத்திற்கும் மாருக அவர்கள் என்ன வெல்லாம் செய்கிருர்கள்! வரலாறு இதற்குச் சான்று பகர்கின்றது; சற்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு நாள்தோறும் கரவினில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளிச்சம் தருகின்றன. அரசியலிலே, சமூக வாழ் விலே, தொழில் முறையிலே,வாணிகத்திலே, கலையிலே எல்லாத் துறைகளிலும் பைம்மறியாகப் பார்க்கும் போது நேர்மைக்கு முன்னல் இந்த வேடத்தையும் காண்கிருேம். நாட்டு அரங்கிலும், உலக அரங்கிலும் இதன் அடி நீரோட்டப் பின்னணிக் காட்சி பதுங்கி யிருக்கிறது. எல்லோருமா அவ்வாறு இருக்கிருர்கள்? இல்லையில்லை. அப்படி நினைத்தால் அது தவறு. ஆளுல் மனிதர்களிலும் பல்லிகள் உண்டு என்பது மட்டும் நிச்சயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/63&oldid=926659" இருந்து மீள்விக்கப்பட்டது