பக்கம்:தேன் சிட்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறிக்கோள்

திருமூலர் கதை உங்களுக்குத் தெரியுமா? அவருடைய இயற் பெயர் திருமூலரல்ல; சுந்தரநாதர் என்பதுதான் அவருடைய பெயர். அவர் மூலனாக மாறிய கதை மிகுந்த சுவையுடையது.

சுந்தரநாதர் வடகயிலையிலிருந்து புறப்பட்டு, சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாவடு துறைக்கு வந்தாராம். பின்பு அங்கிருந்து பொதிய மலையை நோக்கிப் புறப்பட்டுக் காவிரிக்கரையை அடைந்தார். அங்கே ஓரிடத்தில் மூலன் என்ற இடையன் தன் காலம் முடிவுறவே இறந்து கிடந்தான். அவன் அன்புடன் மேய்த்த மாடுகள் அவ்னைச் சுற்றிலும் நின்று கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்தன. இந்தக் காட்சியைக் கண்ட சுந்தர நாதரின் உள்ளம் உருகிற்று. அந்த மாடுகளின் துயரைப் போக்கவேண்டும் என்ற ஆவல் அவருள்ளத்தில் பொங்கிற்று. தவ வலிமையால் அவர் தமது உயிர் மூலனுடைய உடலில் புகுமாறு செய்தார். மூலன் துயில் நீங்கி எழுவதுபோல எழவே மாடுகள் எல்லாம் பெருமகிழ்ச்சி எய்தின. சுந்தரநாதர் பிறகு அந்த உடம்பிலேயே இருக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு உயிர் பெற்ற மூலனே திருமூலராகப் போற்றப்படுகிறான்.

இது உண்மையாக நடந்திருக்குமா என்று ஆராய்ச்சி செய்ய விரும்புகிறவர்கள் செய்து கொள்- தே. சி-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/66&oldid=1395339" இலிருந்து மீள்விக்கப்பட்டது