பக்கம்:தேன் சிட்டு.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


季季* குறிக்கோள் 6. வீற்றிருப்பதுபோலவே அவன் எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும், எங்கும் இருக்கிருன். ஆகவே அவனுக்குச் செய்கின்ற தலைசிறந்த பூசை அவனுடைய வடிவங்களாக விளங்கும் உயிர் களிடத்தும், மற்றப் பொருள்களிடத்தும் அன்பு கொள்ளுவதேயாகும். ஆருயிர்க்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று இராமலிங்க வள்ள லார் பாடியதும், மண்ணுங்கட்டி ஒன்றின் வடிவம் குலைந்தபோது அவர் அதற்காக வருந்தியதும் இந்த உண்மையை உணர்ந்துதான். எல்லா உயிர்களிலும், எங்கும் இறைவன் இருக் கிருன் என்பதை மெய்ப்பிக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். என்னல் முடியாது; நிச்சயமாக முடி யாது. ஆனல் என்னுல் சாதிக்க முடியாதன வெல் லாம் பொய்யென்று போய்விடா. எனக்கு இதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற கவலையும் இல்லை. விவேகாநந்தரைப்போல ஒருவர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற மெய்யான ஆவ்லால் உந்தப்பட்டு இந்தக் கேள்வி யைக் கேட்டால் இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போன்ற தகுதி வாய்ந்த ஒருவர் இதற்குத் தெளி வான பதிலைக் கொடுக்க அங்கே இருப்பார். அதில் எனக்கு ஐயம் இல்லை. சான்ருேர்கள் கூறியுள்ள உறுதி மொழி எனக்குப் போதும். பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி என்ற வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒசை ஒலி யெலாம் ஆனய் நீயே என்று பாடியவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/68&oldid=926664" இருந்து மீள்விக்கப்பட்டது