பக்கம்:தேன் சிட்டு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தேன் சிட்டு


உள்ளத் தூய்மையிலே எனக்கு அளவில்லாத நம்பிக் கையுண்டு. இவ்வாறு பல சான்றோர்களின் மெய் யுரைகளை நான் என் நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காண்பித்துக் கொண்டே போகலாம். ஆனால் அது தேவையில்லை. நான் பாரதியாரோடு சேர்ந்து,

"காக்கை குருவியெங்கள் ஜாதி-நீள்
 கடலும் மலேயும் எங்கள் கூட்டம்
 நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
 நோக்க நோக்கக் களியாட்டம்”

என்று ஜயபேரிகை கொட்டி முழக்க ஆசைப்படு கிறேன்.

கடவுள் நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு நான் இதை எழுதவில்லை, "உலகமே ஒரு குடும்பம்; அதில் பிரிவினைகள் செய்வது தவறு; எல்லோருக்கும் அன்பு செய்வதே நமது கடமை” என்ற கொள்கைகளை வற்புறுத்தவே தத்துவ அடிப்படையிலே எனக்கு வலிமை தரும் உண்மைகளை எடுத்துக் கூறினேன். எனக்குச் சமய நூல்களிலே பரிச்சயம் அதிகமில்லை. இருப்பினும் எனக்குத் தெரிந்த அளவிலே இந்து சமய மட்டுமல்லாமல் எல்லாச் சமயங்களும் அன்பு செய்வதைத் தலைசிறந்த வாழக்கை நெறியாகக் கூறுகின்றன என்று நான் தயக்கமின்றிக் கூறமுடியும்.

விஞ்ஞான அறிவு இன்று வளர்ந்திருக்கும் அள வையும், அதன் காரணமாக அழிவுப் படைகள் உரு வாக்கப்பட்டிருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்து மானிட சாதியின் நலத்தை நாடுவோர். இந்தத் தத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/69&oldid=1155063" இலிருந்து மீள்விக்கப்பட்டது