பக்கம்:தேன் சிட்டு.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிக்கோள் 71 கிருஷ்ண பரமஹம்சர் ஒர் அழகான கதை சொல்லி யிருக்கிரு.ர். ஒரு கிராமத்திற்குப் பக்கத்திலே ஓர் ஆச்ரமம் இருந்தது. அதில் தங்கியிருந்த சாதுக்களில் ஒருவர் சாலை வழியாக எங்கோ போய்க்கொண்டிருந்த போது ஒரு ஜமீன்தார் ஏழை ஒருவனைச் சாட்டை யால் அடிப்பதைக் கண்ணுற்ருர், அவரால் அதைச் சகிக்க முடியவில்லை. அடிக்க வேண்டாம் என்று பரிவோடு ஜமீன்தாரைக் கேட்டுக்கொண்டார். ஜமீன்தாருக்கு முன்னிலும் அதிகமான கோபம் அந்த சாதுவின் மேல் பொங்கி எழுந்தது. அந்த ஏழையை விட்டுவிட்டுச் சாதுவின் மேல் பாய்ந்தார். சாட்டை யால் அவரை அடித்து நொறுக்கினர். சாது மூர்ச்சை யுற்றுப் பிணம் போலத் தரையிலே விழுந்தார். மூச்சின்றிப் பேச்சின்றிக் கிடந்த சாதுவை யாரோ கண்டு, அவர் நிலைமைபற்றி ஆச்ரமத்தி லுள்ள மற்ற சாதுக்களுக்கு எடுத்துக் கூறினர்கள். அவர்கள் ஒடோடியும் வந்து மூர்ச்சையுற்ற சாது வைத் தூக்கிக்கொண்டு ஆச்ரமத்திற்குத் திரும் பினர்கள். ஆச்ரமத்திலே ஒரிடத்திலே அவரைப் படுக்க வைத்தார்கள். அப்பொழுதும் அவருக்கு உணர்வு வரவில்லை. அதனுல் கவலையடைந்த சாதுக்கள் பல வகையான சிகிச்சைகள் செய்யத் தொடங்கினர்கள். ஒருவர் அந்த சாதுவின் தலையைத் தம் மடியின் மேல் வைத்துக்கொண்டு மெதுவாக வா யி ல் கொஞ்சம் பாலை ஊற்றினர். மெதுவாக சாது கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/72&oldid=926669" இருந்து மீள்விக்கப்பட்டது