பக்கம்:தேன் சிட்டு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§ தேன் சிட்டு எனக்கு அவ்வளவு பிடிக்காது. அதன் காரணத்தைப் பின்னல் கூறுவேன். கரிச்சானுக்குப் பிறகு எங்கள் தோட்டத்திற்கு வருவது தேன் சிட்டு. அது அழகான சிறிய குருவி. அதன் கரிய மூக்கு நீண்டு முனையில் சற்று வளைந் திருக்கும். குருவியின் முதுகு கறுப்பாக இருக்கும்; வயிற்றின் பகுதி இலேசான மஞ்சள் கலந்த வெளுப்பாக இருக்கும். பெண் சிட்டின் முதுகிலே கருமைநிறம் குறைவு. பளபளப்பாக நாவற்பழம் போல் முழுதும் ஒரே கறுப்பாகவுள்ள தேன் சிட்டு வகையும் இருக்கிறது. அதுவும் சில நாட்களிலே வருவதுண்டு. தேன் சிட்டின் சுறுசுறுப்பைப்போல நான் வேறெங்கும் கண்டதில்லை. இறக்கைகளை நொடிக்கு நொடி விரித்து விரித்து மூடி மூடி ஒடி ஒடி ஒவ்வொரு சிறிய கிளையிலும் அமர்ந்து அங்குள்ள மலர்களிலே அது தேனருந்துவதைப் பார்ப்பது எனக்கு எல்லை யில்லாத மகிழ்ச்சியளிக்கிறது. அதன் நீண்ட மூக்கை மெதுவாக மலருக்குள்ளே வைத்து மலரின் அடிப் பகுதிலேயுள்ள தேனே அருந்துகிறது. ஒவ்வொரு மலரையும் அது முத்தமிட்டுத் தேன் பருகுகிறது என்று நான் எண்ணுகிறேன். அந்தக் குருவியிடத் திலே எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு. தன் பசியைப் போக்கிக் கொள்வதற்காகத்தான் தேன் சிட்டு மலரிலுள்ள தேனைக் குடிக்கிறது; இருந் தாலும் அதே வேளையில் அது மலருக்கும் உதவு கிறது. மலருக்குள்ளே முழுகி முழுகி வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/9&oldid=926672" இருந்து மீள்விக்கப்பட்டது