பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 துயின்று எழுந்துபார்க்க அச் செங்கற்களெல்லாம் பொன் கை இருத்தலேக் கண்டார். இது சிவபிரான் அருளென்று வியந்து, தம்மையே புகழ்ந்திச்சை பேசினும்’ என்ற பதிகத்தைப் பாடிப் பொன்னைப் பா வை யாரி டம் கொணர்ந்து கொடுத்தார். திருமுதுகுன்றத்துக்குச் சென்று முதுகுன்றர் அருளால் பன்னீராயிரம் பொன்கிடைக்க, அதனைத் திருமணிமுத்தா நதியிலிட்டு அப்பால் திருவாரூர்,சென்று அங்குள்ள கமலாலயத்திலிருந்து அப்பொன்னே எடுத்துப் பரவையாருக்கு வழங்கினர். திருக்குருகாவூரில் சிவபெரு மான் அளித்த பொதிசோற்றை உண்டு, “இத்தனையா மாற்றை அறிந்திலேன்' என்ற பதிகம் பாடினர். தொண் டைநாட்டுத் தலங்களைத் தரிசிக்கையில் திருக்கச்சூரில் சிவபெருமான் பிச்சையெடுத்து வந்து தந்த உணவை உண்டு, 'முதுவாய் ஒரி கதற,’ என்ற பதிகம் பாடினர். பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு வந்த நம்பியாரூரர் திருவொற்றியூர் வந்தடைந்தார். திருக்கைலையில் இருந்த அகிந்திதையார் ஞாயிறு என்ற ஊரில் இருந்த வேளாளச் செல்வர் ஒருவருக்குத் திருப்புதல்வியாராகத் தோன்றிச் சங்கிலியார் என்ற திருப்பெயரோடு வாழ்ந்துவந்தார். மணப்பருவம் எய்தியும் யாரையும் மணக்க விரும்பாமல் அவர் திருவொற்றியூரில் கன்னிகா மாடம் அமைக்கச் செய்து அங்கே தங்கி, திருவொற்றியூர்ப் பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபட்டிருந்தார். சங்கிலியாரைக்கண்டு உள்ளம் பிணிப்புண்ட நம்பியாரூரர் . இறைவர்பால் விண்ணப்பித்து அவரைத் தமக்கு மணம் செய்விக்கும்படி வேண்டினர். 'உன்னைப் பிரியேன்” என்ற உறுதி மொழியை மகிழடிக்கீழ்ப் பெற்றுக் கொள்ளும்படி சங்கிலி