பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - சுந்தரர் தேவாரம் ಊಹಣ5 லோக்கற் கடியேன், அருநம்பி நமிநந்தி, அடியார்க்கும் அடியேன் ஆகுசன் ஆரூரில் அம்மானுக் காளே. - 4 - வம்பரு வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணு, எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன், ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன், நம்பிரான் திருமூலன் அடியார்க் கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்,'அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆளுரில் அம்மானுக் காளே. 5 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்எறிந்த சாக்கியுர்த்கும் அடியேன், சீர் கெர்ண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங் காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன், கார் கொண்ட கொடைகழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணகாதன் அடியார்க்கும் அடியேன், ஆர் கொண்ட வேற்கூற் றன் களங்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன், மெய்யடியன் நரசிங்க முனையரையற் கடியேன் விரி திரை சூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன், கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சை ய்ச்கோன் அடியார்க்கும் அடியேன், ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் - 7 அம்மானுக் காளே. 5. வம்பு - வாசனே. நாட்டம் மிகு-சிவபிரான் திரு வருளால் கண்ணேப்பெற்ற. . . . . . . - 6. கழறிற்றறிவார் சேரமான்பெருமாள் காயர்ை. 7. சத்தியாகிய வரிஞ்சையர்கோன். *