பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகன்பூண்டி - 125 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக், கல்லினுல்எறிக் திட்டும் மோதியுங் கூறை கொள் ளுமிடம், முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மா இகர்வாய், எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக் இங்கிருந் தீர்எம்பிானிரே. - பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவம் ஒன் றறியார், உசிர்க்கொ லேபல நேர்ந்து நாள்த்ொறுங் கூறை கொள்ளும்இடம், முசுக்கள்போற்பல வேடர்வாழ்முருகன் பூண்டி மாநகர்வாய், இசுக்கழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக் கிங்கிருந் தீர்எம்பிரானிரே. - 8 பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் கட்டி வெட்டன ராய்ச், குறைப் பங்கிய சாகி நாள்தொறுங் கூறை கொள்ளு மிடம், மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர்வாய், ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம்பிரானிரே. - தயங்கு_கோலை உடுத்த சங்கரா சாம வேதம்ஒதீ, மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுனும் மார்க்கம் ஒன் றறியீர், முயங்கு பூண்முலை மங்கை யாளொடு முருகன் பூண்டி மாநகர்வாய், இயங்க அம்மிடுக் குடைய ராய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம்பிரானிரே. - .5 3. கூறை-ஆடை. 8. முசுக்கள்-குரங்குகள், இசுக்கு அழிய-பெருமை கெடும் படி. பயிக்கம்-பிச்சை. 4. பத்திரம்-வாள். வெட்டனராய்-கொடிய சொற்களேச் சொல்பவராய். குறைப் பங்கியர்-பரட்டைத் தலயை யுடை யார் பங்கி-தலைமயிர். மோறை-அழகற்ற முகத்தையுடைய. 5. இயங்கவும் இடுக்குடைய ராய்விடில்-நடக்கவும் இடை யூறுடையவரானல் வழிப்பறி செய்வோரால் வழி நடப்பது கூட அபாயத்துக்கு இடமாகுமானல் என்பது கருத்து.