பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சுந்தரர் தேவாரம்

தோற்றம் உண்டேல் மரணம்.உண்டு துயரம் மனை வாழ்க்கை, மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்திரே, நீற்றர் ஏற்றர் நீலகண்டர் நிறை புனல் நீள் சடை மேல், ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே. 2

செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்தொல்லை விழாமுன், வடிகொள்கண்ணார் வஞ்சனையுட் பட்டு மயங்காதே, கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை, அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே. 3

வாழ்வர் கண்டீர் நம்முள்ஐவர் வஞ்சமனத்தீரே, யாவராலும் இகழப்பட்டிங் கல்லலில் வீழாதே, மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம், தேவர்கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே. 4

அரித்து நம்மேல் ஐவர்வந்திங் காறலைப்பான் பொருட்டால், சிரித்த பல்வாய் வெண்டலைபோய் ஊர்ப்புறஞ்சேராமுன், வரிக் கொடுத்திவ் வாள்.அரக்கர் வஞ்சமதில் மூன்றும், எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பதடைவோமே. 5

பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்தடைப்பான் பொருட்டால், மையல் கொண்டிர் எம்மோடாடி நீரும்மனத்திரே, நைய வேண்டா இம்மைஏத்த அம்மை நமக்கருளும், ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடை வோமே. 6

==================================================

2. தோற்றம் - பிறவி, மாற்றம் - மாறுபாடு; சொல்லுமாம். 3. செடி - நாற்றம், ஒல்லை - விரைவில், வடி - கூர்மை. 5. அரித்து - பகைத்து, ஊர்ப்புறம் - மயானம். 6. பொத்து அடைப்பான் பொருட்டால் - வயிற்றுக்குழியை நிரப்பும் பொருட்டு.