பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் - 21 மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும், அல்லிவண் டியங்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.. 4 நரம்பினே டெலும்பு கட்டி நசையினே டிசைவொன் றில்லாக், குரம்பைவாய்க் குடியி ருந்து குலத்தினல் வாழ மாட்டேன், விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும், அரும்புவாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. . . μ 5 மனம்என மகிழ்வர் முன்னே ம்க்கள் தாய் தந்தை சுற்றம், பிணம்எனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண் டேன் நாயேன், பனையிடைச் சோலை தோறும் டைம் பொழில் விளாகத் தெங்கள், அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. - 6 தாழ்வெனுந் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து, வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கொன் மீய கில்லார், ஆழ்குழிப் பட்ட போது வலக்கணில் ஒரு வர்க் காவர், யாழ்முயன் றிருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7. உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்கு கைம் மேல், வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன், கரியமால், அயனுந் தேடிக் கழலடி கான மாட்டா, அரியய்ை கின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. - , 5 8 பொய்த்தன்மைத் தாய மாயப் போர்வையை மெய் யென் றெண்ணும், வித்தகத் தாய வாழ்வு வேண்டிகர்ன் விரும்ப கில்லேன், முத்தினைத் தொழுது நாளும் முடிக ளால் வணங்கு வார்க்கு, அத்தன்மைத் தாகும் ஆரூர்,அப் பனே அஞ்சி னேனே. 5. குரம்பை- குடிசை. டிாதவி - குருக்கத்தி. 6. பண - கிளை. விளாகம் -பரப்பு. . . .