பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ செந்திலாண்டவன் துன்ன மு ன் னு ரை சமய உணர்ச்சி பலவகையில் நிலைகுலைந்திருக்கும் இக் காலத்தில் மக்களுடைய உள்ளத்தில் மீட்டும் அவ் வுணர்ச்சியை விலைகொள்ளும்படிச் செய்யவேண்டியது சமயத்துறையில் தலைமை பூண்டாருடைய கடமை, சமய அறிவு பாவவேண்டுமாளுல் சமய நூல்கள் மக்களுக்கு எளிதிலே கிடைக்கும்படிச் செய்வதே தக்கவழி. மேல் நாட்டுச் சமய போதகர் இவ்வகையில் செய்துவரும் தொண்டு பிறரும் கண்டு மேற்கொள்வதற்குரியது. சைவமும் தமிழும் பரவி ஓங்கவேண்டும் என்னும் ஆர்வம் கொண்டு பலவகையிலும் பேருபகாசச் செயல் கள் புரிந்து வருபவர்களும், ரீ கும் குருபா முனிவரு டைய அருளாட்சியைத் தொடர்ந்து நடத்தும் திருப்பனக் தாள் பூரீ காசிமடத்து அதிபர்களும் ஆகிய நீலழரீ காசி வாசி அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் சைவத் திருமுறைகளை யாவரும் எளிதிலே பெறும்படி செய்யவேண்டும் என்ற திருவுள்ளக் கருத்தை ஒரு முறை தெரிவித்தார்கள். அவர்களுடைய குறிப்பின் படியே முதலில் திருவாசகம் வெளியாயிற்று. இப்போது ஏழாங் திருமுறையாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் அப்பெருமானுடைய திருநாளாகிய ஆடிச் சோதியில் மலர்கிறது. மிகச் சுருக்கமான குறிப்புரை யொன்று இப் பதிப்பில் சேர்க்கப் பெற்றிருக்கிறது.